Main Menu

நிறைவேற்றதிகார பிரதமர் பத­வியை உரு­வாக்­கு­வதே ரணிலின் முழு நோக்கம் – சுசில்

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறையை  ஒழித்தால் அந்த பத­விக்கு இருக்கும் சகல அதி­கா­ரங்­களும் அமைச்­ச­ர­வைக்கு நேர­டி­யாக செல்லும். ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­க­ளை யும் அமைச்­ச­ர­வையின் கீழ் கொண்­டு­வ­ரு­வ­த­னூ­டாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட பிர­தமர் பத­வியை உரு­வாக்க பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முயற்­சிப்­ப­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுசில் பிரே­ம­ஜ­யந்த குற்­றஞ்­சாட்­டி­யி­ருக்­கிறார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின்  ஜனா­தி­பதி வேட்­பா­ளரைத் தெரிவு செய்யும் விவ­கா­ரத்தில் அமைச்சர்  சஜித் பிரே­ம­தா­ச­விடம் ரணில் பிர­தா­ன­மாக மூன்று நிபந்­த­னைளை விதித்­துள்ளார் . அவர் தெரிவு செய்­யப்­பட்­ட­வுடன் நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிக்க வேண்டும், வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளுக்­கான அதி­கா­ரங்­களை முழு­மை­யாக வழங்க வேண்டும்,  ரணில் விக்­கி­ர­ம­சிங்க அந்த கட்­சியின் தலை­மைத்­து­வத்தை வகிப்­ப­தோடு நாட்டின் பிர­த­ம­ரா­கவும் அவரே இருப்பார், இந்த நிபந்­த­னை­க­ளுக்கு இணக்­கப்­பாடு ஏற்­பாடு ஏற்­பட்டால் மாத்­தி­ரமே வேட்­பா­ள­ராகும் வாயப்பை  சஜித்­துக்கு வழங்க முடியும் என்­பதன் அடிப்­ப­டை­யி­லேயே பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெ­று­வ­தா­கவும் பிரே­ம­ஜ­யந்த குறிப்­பிட்டார்.

எதிர் கட்சி தலை­வரின் காரி­யா­ல­யத்தில் நேற்று புதன் கிழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது;    

ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்யும் விவ­கா­ரத்தில் ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் நிலவும் நெருக்­கடி முடி­வின்றி தொடர்­கி­றது. இந்­நி­லையில் வேட்­பாளர் தெரிவு தொடர்பில் இடம்­பெற்று வந்த பேச்­சு­வார்த்­தை­களின் பிர­காரம் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­வ­தானால் அவர் மூன்று நிபந்­த­னை­க­ளுக்கு உடன்­பட வேண்டும் என்று விக்­கி­ர­ம­சிங்க வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இந்த நிபந்­த­னை­களில் ஒரு­கட்­ட­மாவே சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தற்­காக தான் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு தயா­ராக இருப்­ப­தாக அறிக்கை வெளி­யிட்டார். நிறை­வேற்று அதி­கார முறையை ஒழிப்­பதே  கருவின் பிர­தான குறி­கோ­ளாக இருக்­கி­றது. ஆனால் ஜனா­தி­பதி ஆட்சி முறையை நீக்­கு­வது மக்­க­ளுக்­கான தேவை இல்லை. அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்­பதே மக்­களின் எதிர்­பார்ப்­பாக இருக்­கி­றது.

கடந்த காலங்­களில் வெளி­நாட்டு வரு­மா­னத்­துக்­காக வாசனை திர­வி­யங்கள் போன்ற பொருட்­க­ளையே வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்தோம். ஆனால் இந்த அர­சாங்கம் நாடு முழு­வ­தையும் வெளி­நா­டு­க­ளுக்கு விற்க முயற்­சிக்­கி­றது. அம்­பந்­தோட்டை துறை­மு­கத்­தையும் மத்­தளை விமான நிலை­யத்­தையும் வெளி­நா­டு­க­ளுக்கு கொடுத்­த­போது சஜித் ஒரு­போதும் எதிர்ப்பை வெளி­யிட்­ட­தில்லை. கடந்த காலங்­களில் அளித்த வாக்­கு­று­தி­க­ளையே சஜித்  பிரே­ம­தாச இன்னும் தாரக மந்­தி­ர­மாக வைத்­துக்­கொண்­டி­ருக்­கிறார். அதனால் மக்­க­ளுக்கு எந்த நன்­மையும் கிடைக்கப் போவ­தில்லை.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் நோக்கம் தெளி­வாக தெரி­கி­றது. ஜனா­தி­ப­திக்கு உள்ள நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்கி விட்டு அந்த அதி­கா­ரங்­களை பிர­தமர்  பத­விக்கு வழங்­கு­வதே அவரின் எதிர்­பார்ப்­பாகும். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வேட்­பா­ள­ராக கள­மி­றக்கும் போதும் நிறை­வேற்று பிர­தமர் ஒரு­வரை உரு­வாக்­கு­வ­தற்­கா­கவே விக்­கி­ர­ம­சிங்க தேர்தல் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்தார்;. ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை முழு­மை­யாக பிர­தமர் பத­விக்கு திரட்­டிக்­கொள்ள முடி­யாது என்ற கார­ணத்­தினால் மிக சூட்­சு­ம­மான முறையில்  19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை கொண்டு வந்தார்.

நிறை­வேற்று ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் அமைச்­ச­ர­வைக்கு செல்­லு­மாக இருந்தால் மாகாண சபைகள் இயல்­பா­கவே ஸ்தம்­பிதம் அடையும். இவ்­வா­றா­ன­வொரு நிலையில் சஜித்­துக்கு மீண்டும் எதுவும் செய்ய முடி­யாது. கடந்த நான்­கரை வரு­டங்­களில் அர­சாங்கம் மீது முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­களை மூடி மறைப்­ப­தற்­கா­கவே நிறை­வேற்று அதி­கா­ரத்­துக்­கான போட்டி இடம்­பெ­று­கி­றது. ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் கட்­சியின் தலை­மைத்­து­வமும் ரணி­லிடம் செல்­லு­மாக இருந்தால் அர­சாங்­கத்தின் முக்­கிய அதி­கா­ரமும் பிர­தமர் கைவசம் செல்லும். ஆகவே முழு அர­சாங்­கமும் பிர­தமர் தலை­மை­யி­லேயே இயங்கும். அத­னூ­டாக ரணி­லுக்கு ஏற்­ற­வ­கை­யி­லேயே நாட்டின் முழு நிர்­வா­கமும் இடம்­பெறும்.

தற்­போ­துள்ள அர­சாங்­கத்தில் ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாடு ஒன்­றா­க­வும்­பி­ர­த­மரின் நிலைப்­பாடு வேறொன்­றா­கவும் இருக்­கி­றது. ஆகவே இவர்­களின் ஆட்சி மீண்டும் வரு­மாக இருந்தால் தற்­போ­துள்ள முரண்­பாட்டு நிலையே எதிர்வரும் ஆட்சியிலும் தொடரும். ஆகவே இதனை தொடர வேண்டுமா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். ரணிலே கட்சியின் தலைவராகவும் நாட்டின் தலைவராகவும் இருப்பார். எது எவ்வாறிருப்பினும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக கோத்தாபய ராஜபக்ஷ வெற்றியடைவார். எனவே எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியாகும்போது கோதபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 24 மணிநேரத்தில் புதிய அரசாங்கமொன்று உதயமாகும். அதன் பின்னர் விரைவில்  பாராளுமன்ற தேர்தலையும் நடத்துவோம்.

பகிரவும்...