Main Menu

நியூஸிலாந்தின் கெர்மடெக் தீவில் நிலநடுக்கம்!

நியூஸிலாந்தில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை கெர்மடெக் தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது 10.0 கி.மீ ஆழத்துடன் கூடிய மையப்பகுதி ஆரம்பத்தில் 31.4319 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 177.9175 டிகிரி மேற்கு தீர்க்கரேகை என தீர்மானிக்கப்பட்டது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.