நியூயார்க்: மன்ஹாட்டன் நகரில் மர்மப் பொருள் வெடித்ததால் பீதி – ஒருவர் கைது

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்குட்பட்ட மன்ஹாட்டன் நகரில் உள்ள அந்நாட்டின் மிகப்பெரிய பேருந்து முனையத்தில் இன்று மர்மப் பொருள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்குட்பட்ட மன்ஹாட்டன் நகரம், எட்டாவது நிழற்சாலை, 44-வது தெரு பகுதியில் போர்ட் அத்தாரிட்டி பஸ் டெர்மினஸ் என்னும் அமெரிக்காவின் மிகப் பெரிய பேருந்து முனையம் உள்ளது. இந்த முனையத்தை ஆண்டுதோறும் சுமார் ஆறரை கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

போர்ட் அத்தாரிட்டி பஸ் டெர்மினஸ் பஸ் முனையத்தை ஒட்டியுள்ள நடைபாதையில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை திடீரென்று மர்மப் பொருள் வெடித்து சிதறியது.

இதனால் ஏற்பட்ட பயங்கர ஓசையால் அப்பகுதியில் இருந்தவர்கள் பீதியுடன் அலறியடித்து ஓட தொடங்கினர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு மீட்புப் படையினரும் போலீசாரும் விரைந்து வந்தனர். அதே பகுதியில் உள்ள சுரங்க நடைபாதையில் மேலும் ஒரு வெடிப்பொருளுடன் வந்த ஒரு மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

பஸ் முனையத்தை ஒட்டியுள்ள நடைபாதையில் வெடித்தது பைப் குண்டாக இருக்கலாம் என தெரிகிறது. ஆனால், இதுதொடர்பாக மன்ஹாட்டன் நகர போலீசார் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. போலீசாரிடம் பிடிபட்ட 20 வயது வாலிபரின் உடலில் சில இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் வங்காளதேசம் நாட்டை சேர்ந்தவராக இருக்கலாம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளராக சந்தேகிக்கப்படுவதாகவும் சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தீவிரவாத தாக்குதலாக கருதப்படும் இந்த சம்பவத்தை பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக அதிபரின் வெள்ளை மாளிகை ஊடகத்துறை தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !