Main Menu

நியூஜெர்சி மாலில் பனிச்சறுக்கு உள்விளையாட்டு தளம் திறப்பு

அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பனிச்சறுக்கு உள்விளையாட்டு தளம்(indoor ski slope ) பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

நியூஜெர்சியின் கிழக்கு ரூதர்போர்ட் பகுதியில் உள்ள அமெரிக்கன் டிரிம் மாலில் 4 ஏக்கர் பரப்பில், 5500 டன் பனிக்கட்டிகளை கொட்டி இயற்கையான பனிச்சறுக்கு தளம் போல தத்ரூபமாக அந்த தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதில் வீரர்கள் பனிச்சறுக்கில் ஈடுபடும் வசதி, சுற்றுலா பயணிகளுக்கான ரோப் கார் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வடஅமெரிக்காவில் இத்தகைய தளம் ஏற்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.