நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: வெளியானது அதிர்ச்சித் தகவல்

நியூசிலாந்தின் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுக்களை ஒருவரே தனித்து மேற்கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுத்து வரப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி என தெரிவிக்கப்பட்ட அவுஸ்ரேலியாவை சேர்ந்த 28 வயதான டர்ரன்ட் மாத்திரமே இந்த தீவிரவாத செயலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என நியூசிலாந்து பொலிஸ் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏனைய மூவருக்கும் இந்த சம்பவத்துடன் தொடர்பில்லாமல் இருக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்துள்ளதோடு 50பேர் காயமடைந்துள்ளனர். இதில் 34 பேர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 13 பேரின் நிலைமை மோசமாகியுள்ளதாக வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.

கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள டர்ரன்ட் சம்பவத்தை பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !