நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: 9 இந்தியர்கள் மாயம்!

நியூசிலாந்தின் மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 இந்தியர்களும் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து, கிறிஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரண்டு மசூதிகளின் மீது நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இந்திய தூதுவர் சஞ்சீவ் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளதாவது, “பல்வேறு இடங்களில் இருந்து  கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்தியா மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 9 பேர் மாயமானதாக தெரியவந்துள்ளது.

அந்தவகையில் இவ்விடயம் குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மனிதர்களுக்கு எதிராக மாபெரும் குற்றம் அரங்கேறியுள்ளது. நாங்கள் அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து பிரார்த்திப்போம்” என பதிவிட்டுள்ளார்.

நியூசிலாந்தின், கிறிஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரண்டு மசூதிகளில் நேற்று தொழுகை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !