Main Menu

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் – சாய்னா அதிர்ச்சி தோல்வி

நியூசிலாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் தனது முதல் சுற்றில் 16-21, 23-21, 4-21 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையிடம் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

நியூசிலாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஆக்லாந்து நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாய்னா நேவால் தனது முதல் சுற்றில் 212-ம் நிலை வீராங்கனையான வாங் ஸியியை (சீனா) நேற்று சந்தித்தார். அனுபவம் வாய்ந்த சாய்னா 16-21, 23-21, 4-21 என்ற செட் கணக்கில் 19 வயதான வாங்கிடம் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 1 மணி 7 நிமிடங்கள் நடந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரனாய் 21-15, 21-14 என்ற நேர் செட்டில் லோ கீன் யூவை (சிங்கப்பூர்) வெளியேற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரனீத் 21-17, 19-21, 21-15 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் சுபாங்கர் தேவை தோற்கடித்தார்.