நியூசிலாந்து – இலங்கைக்கிடையிலான 2வது டெஸ்ட் நாளை ஆரம்பம்

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த நிலையில் இரண்டாவது போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.

தொடரை வெல்லும் நோக்குடன் இலங்கை அணி சில மாற்றங்களை மேற்கொள்ளும் என எதிர் பார்க்கப்படுகின்ற நிலையில் வேகமாக பந்துவீசக்கூடிய வேகப்பந்துவீச்சாளரான துஷ்மந்த சமீரவை வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜிதவுக்கு பதிலாக களமிறக்கும் வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை நியூசிலாந்து அணி மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படாது முதலாவது டெஸ்டில் விளையாடிய அணியே விளையாடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

முதலாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மைதானம் முக்கியம் பெறுகின்pற நிலையில் இது முதலாவது டெஸ்டை விட வேகமானதாகவும் முடிவைத் தரக்கூடியதாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !