நியூசிலாந்தில் காட்டுத்தீ: நூறு குடும்பங்கள் கட்டாய வெளியேற்றம்

நியூசிலாந்தின் தெற்கு தீவில் காட்டுத் தீ வேகமாக பரவி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.

இதேவேளை, பல சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், சுமார் நூறு குடும்பங்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளனர்.

இயற்கை பாரம்பரிய பூங்காவான பீஜியன் பள்ளத்தாக்கில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இது இரவு நேரத்தில் வேகமாக பரவியதில் சுமார் ஆயிரத்து 870 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.

இந்நிலையில், அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் சிவில் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தீயை கட்டுப்படுத்தும் பணியில் 12 தீயணைப்பு வீரர்களும், 10 ஹெலிகொப்டர்கள் மற்றும் இரண்டு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எனினும், தீயை கட்டுப்படுத்துவதற்கு குறைந்தது நான்கு நாட்களேனும் தேவைப்படுவதாக தீயணைப்பு வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !