நாளை முதல் 05 தினங்களுக்கு சிறைக்கைதிகளை பார்வையிடலாம்
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நாளை (13) முதல் 05 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் சிறையில் உள்ளவர்களை தங்களது உறவினர்கள் சந்திப்பதற்கு இரண்டு நாட்களே வழங்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் போக்குவரத்து குறைபாடு உட்பட சில பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்வதன் காரணமாக இந்தக் காலத்தை 05 நாட்களாக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.