நாளை மறுதினம் முதல் மின்சாரம் துண்டிக்கப்படாது – அமைச்சர்
இலங்கை மின்சார சபை உற்பத்தி செய்யும் கட்டணத்தை விட குறைந்த விலைக்கே மிதக்கும் மின்உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சாரம் கொள்வனவு செய்யப்படுவதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்த போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
அத்தோடு, நாளை மறுதினத்தில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அலகொன்று 25 ரூவா வீதம் 500 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்யும் இயலுமை இருப்பதாக அமைச்சர் கூறினார்.
என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.