நாம் தொடர்ந்தும் முறையான பிரெக்ஸிற்றுக்காக போராட வேண்டும் : மேர்க்கல்

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தத்துடன் ஒழுங்கான முறையில் பிரித்தானியா வெளியேறுவதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியது அவசியமென ஜேர்மனியின் அதிபர் அஞ்செலா மேர்க்கல் இன்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும் ஒப்பந்தம் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறினால் அதற்கு தேவையான தயார்ப்படுத்தல்களையும் ஜேர்மனி முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்ட பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் பிரித்தானிய நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது மிகுந்த கவலையளிப்பதாகவும் பிரித்தானியாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை தெரேசா மே தான் தெரிவிக்க வேண்டுமெனவும் அஞ்செலா மேர்க்கல் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறினால் நிச்சயமாக சேதம் விளைவிக்கப்படும் அனால் அந்த சேதத்தின் அளவை மட்டுப்படுத்தவே நாங்கள் விரும்புகிறோமென ஜேர்மன் அதிபர் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !