Main Menu

நாம் தமிழர் சீமான் மருத்துவமனையில் அவருக்கு என்ன ஆனது?

திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து சீமான் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மட்டுமே நடைபெற்றதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

கடந்த திங்களன்று காலையில் இருந்தே சீமான் சோர்வாகவே இருந்துள்ளார். இதனால் அவர் அன்றைய தினம் யாரையும் சந்திக்கவில்லை. கட்சியில் மிக மிக முக்கிய நிர்வாகிகள் கூட சீமான் வீட்டுக்கு வந்துவிட்டு அவரை சந்திக்காமலேயே திரும்பிச் சென்றதாக கூறுகிறார்கள். மேலும் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம் என்று திட்டமிடட நிலையில் சீமான் வரமறுத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். இதற்கிடையே திங்களன்று மாலையில் சீமான் மிகவும் சோர்வடைந்ததாகவும் நெஞ்சு வலிப்பது போல் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ந்து போன குடும்பத்தினர் உடனடியாக அவரை சென்னை வடபழனியில் எஸ்ஆர்எம் நிறுவனத்திற்கு சொந்தமான சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சீமானுக்கு நெஞ்சுவலி என்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் பரவின. இதனால் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் சிலர் சிம்ஸ் மருத்துவமனை முன்பு கூடினர். ஆனால் சீமான் வழக்கமான உடல் பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டது. ஆனால் வழக்கமான உடல் பரிசோதனைக்கு யாராவது மாலை நேரத்தில் மருத்துவமனைக்கு செல்வார்களா என்று சில கேள்விகள் எழ ஆரம்பித்தனர்.

உடல் பரிசோதனை என்றால் காலையில் செல்வார்கள் மாலையில் வீடு திரும்புவார்கள். ஆனால் சீமான் மாலையில் மருத்துவமனைக்கு சென்ற போதே அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அதிலும் சீமானுக்கு தற்போது வயது 53. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் சீமான் எப்போதுமே ஆர்வமுடன் இருப்பவர். இந்த வயதிலும் வாலி பால், கபடி விளையாடுவார். அதே போல் தினசரி உடற்பயிற்சி செய்யாமல் அவர் உறங்கச் செல்வதில்லை. அப்படி இருந்தும் சீமானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.

அதோடு சீமான் அண்மைக்காலமாக மிகவும் சோர்வாகவே காணப்படுவதாகவும், வழக்கமான உற்சாகம் அவரிடம் மிஸ்ஸிங் என்கிறார்கள். கடந்த வாரம் திலீபன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கூட சீமானிடம் வழக்கமான ஆவேசப்பேச்சு காணப்படவில்லை. இதற்கு அவரது உடல் மற்றும் குரல் ஒத்துழைக்காததே காரணம் என்று சொல்லப்படுகிறது.இந்த நிலையில் தான் நெஞ்சு வலி என்று சீமான் கூறியதால் சிம்ஸ் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளார். அங்கு நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு சில பிரச்சனைகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதற்கு சில சிகிச்சை முறைகளையும் மருத்துவர்கள் சீமானிடம் பரிந்துரைத்ததாக சொல்கிறார்கள். விரைவில் அந்த சிகிச்சைகளை மேற்கொள்ள சீமான் மீண்டும் மருத்துவமனைக்கு செல்வார் என்று கூறுகிறார்கள். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே உடலினை மீண்டும் உறுதி செய்து சீமான் களம் இறங்க வேண்டும் என்பது தான் அவரது கட்சியினரின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

பகிரவும்...
0Shares