நாமல் ராஜபக்ஸவிற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பயணத் தடை தற்காலிகமாக நீக்கம்

கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பயணத் தடை தற்காலிக அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது. கோட்டே நீதவான் நீதிமன்றினால் இவ்வாறு தற்காலிக பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.
மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக நாமல் ராஜபக்ஸவிற்கு பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது. மோசடி குற்றச்சாட்டு ஒன்று தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஸவிற்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !