நாட்டை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்துமாறு மங்களவுக்கு நாமல் ஆலோசனை

நாட்டை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்துமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம், பாராளுமன்ற உறுப்பினர் நாமல்   ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் மங்கள சமரவீர, மஹிந்த ராஜபக்ஸ எதிர்ப்பு பற்றி அதிகளவு கவனம் செலுத்துவது அனைவரும் அறிந்தது ஒன்றே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், ராஜபக்ஸக்களை தாக்குவதனை விட்டுவிட்டு நாட்டை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்துமாறு நாமல் கோரியுள்ளார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அதிகளவு சிரத்தை எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !