Main Menu

நாட்டில் மேலும் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 137 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 38 பேர் தனிமைப்படுத்தப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் எனவும் ஏனைய
99 பேரும் மினுவங்கொட, பேலியகொட மீன் சந்தை மற்றும் மீன்பிடித் துறைமுக தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாயிரத்து 946ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 561ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில், நான்காயிரத்து 399 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் இன்னும் ஆறாயிரத்து 142 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 20 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares