நாட்டின் நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறி அரசியலில் ஆதாயம் தேட அரசாங்கம் முயற்சி- அநுர
நாட்டின் நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறி அரசியலில் ஆதாயம் தேடவே, கொரோனாவின் உண்மை நிலையை அரசாங்கம் மறைக்கின்றதென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அநுர மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் அனைவரும், சுகாதார விதிமுறைகளை தற்போது மறந்துள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட நோயாளிகளை விட குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.
மேலும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் கொவிட் 19 சோதனை அறிக்கைகளில் அரசாங்கம் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதால், பல்கலைகழகமும் பி.சி.ஆர்.சோதனைகளில் இருந்து விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசாங்கம், கொரோனா வைரஸ் தொற்றின் உண்மை நிலையை மறைப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.