நாட்டின் நலனில் அரசியல்வாதிகள் அக்கறை கொள்ள வேண்டும்: ஜனாதிபதி

நாட்டின் நலனில் அரசியல்வாதிகள் அக்கறை கொண்டு செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மஹர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல்வாதிகள் எமது நாட்டினதும் நாட்டு மக்களதும் நலனில் அக்கறை கொண்டு பொறுப்புடன் செயற்படவேண்டும். அரசியல் இலாபத்திற்காகக் கருத்துக்கள் தெரிவிப்பதை விடுத்து மக்கள் நலன்சார்ந்த திட்டங்களில் அவதானம் செலுத்தவேண்டும்.

பெரும்பாலான அரசியல்வாதிகள் தமது நேரத்தினை தேவையற்ற கருத்துக்களைக் கூறி வீணடித்து வருகின்றனர். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பொறுப்பற்ற கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர்.

இயற்கை அனர்த்தம் மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !