நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அரச வளங்களுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன் :

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அரச வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே மகிந்தவை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இன்று வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானியில் இவ்விடயம் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் இன்று இரண்டு விசேட வர்த்தமானிகள் வெளியிடப்படுள்ளன. ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த விசேட வர்த்தமானியில், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் (42) 4 சரத்திற்கு அமைய, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்திருப்பதாகவும் தனது அதிகாரத்திற்கு அமைய, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரி அறிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !