நாட்டின் தற்போதைய நிலைமை – விவாதம்
நாட்டின் பாதுகாப்பு நிலவரம் பற்றி ஆராய்வதற்காக இன்றும் நாளையும் விசேட பாராளுமன்ற விவாதம்.
இன்றும் நாளையும் பாராளுமன்றக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதில் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் பற்றி ஆராயப்படும். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன்போது பாராளுமன்றத்தின் ஊடாக முக்கியமான மற்றும் பொருத்தமானதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சபாநாயகர் கட்சித் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்ற விவாதத்தில் ஒருவரையொருவர் வீணே குற்றம் சாட்டுவதைத் தவிர்த்து பொறுப்புடன் விவாதத்தில் கலந்து கொள்ளுமாறும் தமது கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்குமாறு சபாநாயகர் கட்சித் தலைவர்களிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.