நாட்டின் சொத்துக்களை விற்று பொருளாதார ஸ்திரத்தை பேண முடியாது: மஹிந்த

நாட்டின் சொத்துக்களை விற்று பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய முடியாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெங்களூர் நகரில் ‘தி இந்து’ நாளிதழ் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில் இன்று (சனிக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

‘தி இந்து’ நாளிதழின் ஏற்பாட்டிலான மூன்று நாள் மாநாட்டில் கலந்துக் கொள்ளும் நோக்கில் எதிர்க்கட்சி தலைவர் நேற்று இந்தியாவிற்கு விஜயம் செய்தார்.

எதிர்க்கட்சி தலைவருடன், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !