நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு வீழ்ச்சி அடைகின்றமைக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும்

நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு வீழ்ச்சி அடைகின்றமைக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோது, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற குழுத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு செயற்பாடுகளின் போதும், காவற்துறையினர் தமது கடமைகளை மேற்கொள்வதில், தாமதம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இவை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !