நாடு முழுவதும் 69,000 ஆர்ப்பாட்டக்காரர்கள்

நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பதினோராவது வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் நாடு முழுவதும் 69,000 பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வார ஆர்ப்பாட்டத்தில் 84,000 பேர் கலந்துகொண்டிருந்த நிலையில், இவ்வாரம் கணிசமாக எண்ணிக்கை குறைந்திருந்ததாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் பரிசுக்குள் 4,000 பேர் கலந்துகொண்டனர். place de la République இல் மஞ்சள் மேலங்கி போராளிகள் பலர் கூடியிருந்தனர். அங்கு வன்முறைகள் எதுவும் வெடிக்கவில்லை என்றபோதும், அவர்கள் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.
அதே வேளை, மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் முக்கிய ஒருங்கிணைப்பாளரான Maxime Nicolle நேற்று இரவு Bordeaux நகரில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவர் சில மணிநேரங்களிலேயே விடுவிக்கப்பட்டார். உள்துறை அமைச்சர் Christophe Castaner நேற்றைய வன்முறைகளை கண்டித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !