நாடு பின்னடைவை எதிர்நோக்கும்: இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை

உடன்பாடற்ற பிரெக்சிற்றினால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடு எதிர்நோக்கிய நிதி நெருக்கடியை விட மிக மோசமான பின்னடைவை எதிர்நோக்க நேரிடும் என, இங்கிலாந்து வங்கி எச்சரித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பொருளாதாரம் உடனடியாக 8 வீதத்தினால் வீழ்ச்சியடைவது மாத்திரமின்றி, வீடுகளின் விலைகளும் வீழ்ச்சிக்காணும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரெக்சிற் எந்தவகையிலும் நாட்டிற்கு மோசமானதாகவே அமையும் என திரைசேறி திணைக்களம் அறிவித்திருந்த நிலையிலேயே இங்கிலாந்து வங்கியின் இந்த ஆய்வு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறிய பின்னரான ஐந்து வருட காலப்பகுதியின் பார்வையின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், 2023ஆம் ஆண்டின் இறுதியுடன் நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !