நாடு கடத்தப்படவிருந்த நைஜீரிய பிரஜை விமான நிலையத்தில் உயிரிழப்பு

கனடாவில் இருந்து நாடுகடத்தப்படவிருந்த நைஜீரிய பிரஜை ஒருவர் விமான நிலையத்தில் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நைஜீரிய பிரஜை ஒருவர் Calgary சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட போது அவருக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

49 வயதான போலான்லி அலோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து அலோவின் வழக்கறிஞர் கூறுகையில், அலோவின் மனைவியும் இரு பிள்ளைகளும் நைஜீரியாவில் வசிக்கிறார்கள். மனைவியை விரைவில் கனடாவுக்கு அழைத்து வர முடியும்  என அலோ நினைத்திருந்தார். எனினும் அவருக்கு நிரந்தர புகலிடம் மறுக்கப்பட்டதால் நாடு கடத்தப்பட்டிருக்கலாம்’ என கூறியுள்ளார்.

மேலும், அலோ எதனால் இறந்தார் என அவர் குடும்பத்தாருக்கு தெரியவில்லை, அது குறித்து கனேடிய அரசாங்கம் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும் அவர் போது வலியுறுத்தியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !