நடுவானில் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சித்த பெண் பயணி

 அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இருந்து டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹவுஸ்டன் நகருக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது, பெண் பயணி ஒருவர் விமானத்தில் பின் பகுதியின் இறுதியில் உள்ள எமர்ஜென்ஸி கதவை திடீரென திறக்க முயன்றார். எமர்ஜென்ஸி கதவின் ஒரு பகுதியையும் அவர் கிளித்தார்.
இதனை கண்டதும் அருகில் இருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸின் 4519 விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
பின்னர், அருகில் இருந்த பயணிகள் விமான ஊழியர்களிடம் இதனை தெரிவித்தனர். இதனையடுத்து விமானத்தை கார்பஸ் கிரிஸ்டி நகருக்கு பைலட் திருப்பி விட்டார்.
கார்பஸ் கிரிஸ்டி விமானநிலையத்திற்கு வந்தவுடன் தொந்தரவு கொடுத்த அந்த பயணி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானங்களில் கடந்த 46 வருடங்களில் விபத்தும் எதுவும் நிகழ்ந்ததில்லை என்பதால் மிகவும் நம்பமான ஏர்லைன்ஸ் என்று கருதப்படுகிறது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !