நாடாளுமன்றம் கலைக்கப்படாது – அரசாங்க தகவல் திணைக்களம்

நாடாளுமன்றம் கலைக்கப்படாது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் இன்று(புதன்கிழமை) கலைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில் இதுதொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே, நாடாளுமன்றம் கலைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்கின்றன அரச ஊடகங்கள்?(2ஆம் இணைப்பு)

நாடாளுமன்றம் கலைக்கப்படாது என சில அரச ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக ஊடகங்களில் இதுதொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

Roel Raymond@kataclysmichaos

Several pro-govt websites, govt. media secs now rule out possibility of premature dissolution. Given it was pro-Sirisena ministers who discussed it first, does this sudden reversal indicate initial overtures were shot down by legal experts due to constitutional barriers?

விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்? : ஜனாதிபதி தீவிர சட்ட ஆலோசனை!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதில் சவால்களை எதிர்நோக்கியுள்ளநிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தரப்பினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச  தலைமையிலான தற்காலிக அரசாங்கத்தை அமைப்பதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதா? அன்றேல் 19வது திருத்தம் இருக்கும் நிலையிலும் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதா ? எனவும் சட்ட நிபுணர்களுடன் தீவிர சட்ட ஆலோசனை இடம்பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தை விரைவில் கலைப்பது தொடர்பாக ஜனாதிபதி சிரிசேன பிரதம நீதியரசருடன் கலந்துரையாடவுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டப்பட்டுள்ளது.

Roel Raymond@kataclysmichaos

Sources close to President @MaithripalaS say he is likely to consult CJ on dissolving Parliament prematurely. President will argue that provisions of 19A barring premature dissolution are superseded by Article 33 (2)- the general description of Presidential functions.

நாடாளுமன்றக் கலைப்பு அல்லது சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது குறித்து ஜனாதிபதி தரப்பினர் சட்டநிபுணர்களிடம்  ஆலோசனை நடத்தப்பட்டுவருவதாக வெளியாகியுள்ள தகவல்களின் உண்மையை உறுதிசெய்யும் வகையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்கவிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டபோதும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

எனினும் நாடாளுமன்ற கலைப்புப் பற்றி தீவிர ஆலோசனை இடம்பெற்று வரும் விடயத்தை மஹிந்த ராஜபக்ச ஆதரவு மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில்ராஜ் தனது பேஸ்புக் பதிவில் உறுதிசெய்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ம்திகதி அமைச்சரவையைக் கலைத்தபின்னர் ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மறுநாளான 27ம் திகதி நாடாளுமன்றத்தை நவம்பர் 14ம்திகதி வரை ஒத்திவைக்கும் முடிவை அறிவித்திருந்தார்.

இதனையடுத்து உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் கடுமையான அழுத்தங்கள் எழுந்தநிலையில் எதிர்வரும் 14ம்திகதியன்று நாடாளுமன்றத்தைக் கூட்டும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியது. நேற்று முன்தினம் கொழும்பு நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி சிரிசேன தம்மிடம் ஏற்கனவே 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக கூறியிருந்தார்.

எனினும் நேற்றையதினம் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் சென்றிருந்த மனுஷ நாணயக்கார தமது பிரதியமைச்சர் பதவியைத் துறந்து ஐக்கிய தேசியக்கட்சி தரப்பிற்கு ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். இந்தநிலையில் மைத்திரி -மஹிந்த தரப்பிற்கு தற்போது 104 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.

இந்த நிலையில் சாதாரணப் பெரும்பான்மையைப் பெறவே இன்னமும் 9 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக உள்ளது. இந்த நிலையில் சிறுபான்மைக்கட்சிகளான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, முஸ்லிம் கொங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி ,அகில இலங்கை மக்கள் கொங்கிரஸ் ஆகியவற்றோடு ஜேவிபியும் மைத்திரிபால -மஹிந்த தரப்பிற்கு ஆதரவு கொடுக்கப்போவதில்லை என திட்டவட்டமாக மீண்டும் அறிவித்துள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் 14ம் திகதிக்குள் பெரும்பான்மையைப் பெறுவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து தற்போது நாடாளுமன்றக் கலைப்பு அல்லது சர்வஜன வாக்கெடுப்பு ஆகிய இரு தீர்மானங்களில் ஒன்றை மேற்கொள்ளும் வகையில் ஜனாதிபதி தரப்பினர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Roel Raymond@kataclysmichaos

According to sources, President @MaithripalaS‘s group has consulted legal experts on two options – 1) a referendum on a decision to appoint a ‘Caretaker Govt.’ with @PresRajapaksa as Prime Minister or 2) the premature dissolution of Parliament, despite 19A.

Chandani Kirinde@ChandaniKirinde

So Sarath Fonseka & Ajith Perera talking of dissolution of parliament even thou its illegal. Given @MaithripalaS disregard for the law, it may happen .

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தனது பேஸ்புக் பதிவில் இன்றிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருந்த போதிலும் நாடாளுமன்றக் கலைப்பு பற்றி வெளியாகிவரும் தகவல்கள் மஹிந்த தரப்பினரால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகளை அடியொற்றியது என்ற கருத்தும் டுவிட்டர் தளத்தில் பதிவாகியுள்ளது.

M A Ratna@maratnasiri

Rumours of parliament being dissolved spread by @PresRajapaksa camp. He wants a general election, buy @MaithripalaS wants only a presidential poll. Part of internecine clashes in the new MS/MR coalition. Constitutionally, legislature can’t be sacked now. NO NUMBERS

அரசியல்யாப்பின் 19வது திருத்ததிற்கு அமைவாக ஜனாதிபதியால் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்ற போதிலும் அமைச்சரவையைக் கலைத்தமை, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை ,மஹிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்தமை, நாடாளுமன்றத்தை இக்கட்டான தறுவாயில் ஒத்திவைத்தமை போன்ற கடந்த 12 நாட்களுக்குள்ளாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பல தடவைகள் அரசியல்சாசனத்தை மீறிச் செயற்பட்டுள்ள நிலையில் மீண்டும் அரசியலமைப்பிற்கு முரணாக நாடாளுமன்றத்தைக் கலைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற கருத்துக்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச தரப்பினரோ ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல்யாப்பிற்கு உட்பட்டதாகவே இடம்பெற்றுள்ளதாக தமது வாதங்களை முன்வைத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Harsha de Silva

@HarshadeSilvaMP

President @MaithripalaS cannot dissolve Parliament unless 150 MPs seek its dissolution. See photo. This is not his kingdom and we are not his subjects. President has to work within the Constitution. It is not toilet paper for presidential waste matter. @RW_UNP

அரசியலமைப்பின் 19வது திருத்தத்திற்கு அமைய நாடாளுமன்றத்தில் அரசாங்கம் பதவியேற்று நாலரை ஆண்டுகளின் பின்னரே ஆட்சியை ஜனாதிபதி கலைக்கமுடியும். நாடாளுமன்றத்திலுள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் நாடாளுமன்றத்தை ஜனாதிபதியால் வேளைக்கே கலைக்க முடியும். அப்படியில்லாதசூழ்நிலையில் தற்போதைய நாடாளுமன்றத்தை 2020ம்ஆண்டு மார்ச் 1ம் திகதிக்கு முன்னர் கலைக்க முடியாது. ஆனால் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதில் தீர்மானம் வெற்றிபெறும் இடத்து அல்லது நாடாளுமன்றில் சமர்பிக்கப்படும் வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்படுமிடத்து ஜனாதிபதியால் புதிய பிரதமரை நியமிப்பதற்கான அதிகாரம் உள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !