நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சட்டமன்றத் தேர்தலே தமது இலக்கு எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனையில் ஈடுபட்டார். இதன்போது நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி மன்றத்தின் நிலைப்பாடு என்னவென்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், ரஜினிகாந்த் இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. சட்டமன்றத் தேர்தலே எங்களது இலக்கு. நாடாளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. ரஜினி மன்றத்தின் கொடி, படம், பெயரை எந்த கட்சிக்கும் ஆதரவாக பயன்படுத்தக்கூடாது. தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ அவர்களுக்கு சிந்தித்து வாக்களியுங்கள்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !