நாடளாவிய ரீதியில் பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு
நாளைய தினம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் தற்சமயம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இம்முறை பொதுத் தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு பணிகள் நாடளாவிய ரீதியில் 13,421 வாக்கெடுப்பு நிலையங்களில் நாளை இடம்பெறவுள்ளது.
அதற்கமைய வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லும் பணிகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு, எடுத்துச் செல்லப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.