நாகோர்னோ-கராபாக் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கு வெடிப்பு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
நாகோர்னோ-கராபாக் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கு வெடித்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஆர்மீனியர்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேறி வரும் நிலையில் இடம்பெற்ற இந்த விபத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இதுவரை 13 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதில் ஏழு பேர் படுகாயங்களை அடுத்து இறந்ததாகவும் பிராந்தியத்தின் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போதுவரை 290 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் பெற்றுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்க்குக்காக தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.