Main Menu

நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­புங்கள்

புதிய அர­சாங்கம்  பத­வி­யேற்று  சுமார் ஒரு­மா­த­காலம் கடந்­துள்ள நிலையில்   புதி­ய­ தொரு தசாப்­தத்துக்­கான ஆரம்பம் நிகழ்ந்­தி­ருக்­கின்­றது.   இதனை வெறு­மனே  2020 ஆம் ஆண்டின் ஆரம்பம் என்று கூறு­வதை விட அடுத்த பத்து வரு­டங்­க­ளுக்­கான அல்­லது ஒரு தசாப்­தத்­துக்­கான  ஆரம்பம் என்று கூற முடியும்.
இவ்­வாறு  புதிய அர­சாங்கம்  மற்றும் ஒரு தசாப்­தத்­துக்­கான ஆரம்பம்  என்­ப­வற்­றுக்கு மத்­தியில் இந்த நாட்டில் மக்கள்   முக்­கி­ய­ மாக  தமிழ்ப்பேசும் மக்கள் எதிர்­கொண்­டுள்ள பிரச்­சி­னைகள் மற்றும்  நீண்­ட­கா­ல­மாக  தீர்க்­கப்­ப­டா­துள்ள பிரச்­சி­னைகள் எவ்­வாறு தீர்க்­கப்­ப­டப்­போ­கின்­றன என்­பதே     மிக முக்­கி­ய­மான விட­ய­ங்களாக   அவ­தா­னிக்­கப்­ப­டு­கின்­றது.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின்  அர­சி­யல்­பி­ரச்­சினை, மலை­யக மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னைகள், முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னைகள் என  இந்த நாட்டின்   சிறு­பான்­மை­யின மக்­களின்   பிரச்­சி­னைகள்,  விரை­வாக  தீர்க்­கப்­ப­ட­வேண்டும் என்­பது  பரந்­து­பட்ட ரீதி­யி­லான எதிர்­பார்ப்­பாக   காணப்­ப­டு­கின்­றது.   இங்கு  அவ­சி­ய­மாக  ஆரா­யப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாக   இருப்­பது இந்தப் பிரச்­சி­னை­களை  எவ்­வாறு    பத­வி­யி­லி­ருக்­கின்ற அர­சாங்கம் தீர்க்­கப்­போ­கின்­றது என்­ப­தே. அதா­வது புதிய ஜனா­தி­பதி   இந்தப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­காக எவ்­வாறான அணு­கு­மு­றை­களை  முன்­னெ­டுக்­கப்­போ­கின்றார் என்­பது பல­ரதும்   அவ ­தா­னத்­திற்­குட்­பட்­டுள்­ள­தாக   இருக்­கி­றது.


பிர­தான பிரச்­சினை
இந்த நாட்டைப் பொறுத்­த­வ­ரையில்  1948 ஆம் ஆண்டு சுதந்­திரம் கிடைத்­ததன் பின்னர்   பல்­வேறு   தீர்க்­கப்­ப­டாத நீண்­ட­காலப் பிரச்­சி­னைகள்  நீடித்து வரு­கின்­றன.  தீர்க்க முடி­யு­மான பல பிரச்­சி­னை­களும் காணப்­ப­டு­கின்­றன.  நீண்­ட­காலப் பிரச்­சி­னைகள், மற்றும் அந்­தந்­தக்­கா­லப்­ப­கு­தியில் ஏற்­படும் பிரச்­சி­னைகள் என பல நெருக்­க­டி­க­ளுக்கு விரை­வாக அர­சாங்கம்  தீர்­வு­ கா­ண­ வேண்டி  இருக்­கி­றது.   அதா­வது இவற்றின் விடிவு  தொடர்­பாக  மக்கள் மத்­தியில் நம்­பிக்கை கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வேண்டும்.


இங்கு முக்­கி­ய­மான பிரச்­சி­னை­களை நாம் வரி­சைப்­ப­டுத்த முனை­வோ­மானால் தமிழ்த்தேசிய  இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விவ­காரம் முக்­கிய இடத்தைப் பிடிக்­கி­றது.    தமிழ்ப்பேசும் மக்கள் தமது அர­சியல் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­றிக்­கொள்ளும் நோக்கில் அர­சியல் அதி­கா­ரப்­ப­கிர்வுத்  திட்­ட­மொன்று தமக்கு வழங்­கப்­ப­ட­ வேண்­டு­மென  நாட்­டுக்கு சுதந்­திரம் கிடைத்ததில் இருந்து கோரி வரு­கின்­றனர். அந்த  நெருக்­க­டிக்கு,  இன்னும்  சக­லரும்  ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தான மற்றும்    தமிழ்ப்பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­றிக்­கொள்­ளக்­கூ­டி­ய­தான தீர்­வுத்­திட்­டத்தை அடைய  முடி­ய­வில்லை.   எனவே  புதிய   ஜனா­தி­பதி   இந்தப் பிரச்­சி­னைக்கு  எவ்­வாறு  ஒரு நிரந்­தரத்  தீர்வைக் காணப்­போ­கின்றார் என்­பது   இங்கு முக்­கி­ய­மான விட­ய­மாக காணப்­ப­டு­கின்­றது.


தமிழ் மக்­களின் நிலை
தாம்  இந்த நாட்டில்  ஒரு சமத்­து­வ­மான பிர­ஜை­யாக   நடத்­தப்­ப­ட­வில்லை. எனவே  எமக்கு ஓர் அர­சியல் அதி­கா­ரப்­ப­கிர்வு அவ­சியம் என்­பதே தமிழ் மக்­களின் கோரிக்­கை­யாக  காணப்­ப­டு­கி­றது.   ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ  தான்  நாடு முழு­வ­திலும்  சமத்­து­வ­மான முறையில்  அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுப்­பதன் மூலம் இந்த பிரச்­சி­னையை  தீர்க்கப் போவ­தாக  அறி­வித்­தி­ருக்­கின்றார்.  அபி­வி­ருத்­தியே, பிரச்­சினை தீர்­வுக்­கான ஒரே வழி என்­பது ஜனா­தி­ப­தியின்  தெளி­வான கருத்­தாக  அமைந்­தி­ருக்­கின்­றது.
இந்தத்  தேசிய  பிரச்­சினை மட்­டு­மன்றி மேலும் பல்­வேறு பிரச்­சி­னைகள்   இந்த நாட்டின்   அவ­ச­ர­மாக தீர்க்­கப்­ப­ட­வேண்­டி­ய­வை­யாக உள்­ளன.

 
பொதுவான பிரச்­சி­னை­களை எடுத்­து­நோக்­கும்­போது அபி­வி­ருத்தி, பாது­காப்பு விடயம், பொரு­ளா­தார வளர்ச்சி,  வேலை­யின்மை,  வறுமை,  இளைஞர் பிரச்­சி­னைகள்,  ஒழுக்கம் சம்­பந்­த­மான   சிக்­கல்கள்,  அர­சியல் நெருக்­க­டிகள்,  சுற்­றாடல் பிரச்­சி­னைகள், சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான தேசிய  ஒற்­றுமை, புரிந்­து­ணர்வு,  தேசிய நல்­லி­ணக்கம், துறைசார் அபி­வி­ருத்தி, கல்வி, சுகா­தார   போக்­கு­வ­ரத்து உள்­ளிட்ட உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி  உள்­ளிட்ட பல்­வேறு  விட­ய­தா­னங்கள்  அவ­ச­ர­மாக  ஆரா­யப்­ப­ட­வேண்­டி­ய­வையாகக் காணப்­ப­டு­கின்­றன.  ஜனா­தி­பதி கோத்­த­பாய  தலை­மை­யி­லான புதிய  அர­சாங்கம் இந்த விட­யங்­களை எவ்­வாறு அணுகும் என்­பது   எதிர்­பார்க்­கப்­படும் மிக முக்­கி­ய­மான கார­ணி­யாக உள்­ளது.

எவ்­வாறு செய்­யப்­போ­கிறார்?
இவை தொடர்பில் எவ்­வாறான அணு­கு­ மு­றை­களை  முன்­னெ­டுக்­க இருப்ப­தாக  ஜனா­தி­பதி கோத்­த­பாய தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். எனினும் அவை எவ்­வாறு செயற்­பாட்டு ரீதி­யாக  முன்­னெ­டுக்­கப்­பட போகின்­றன என்­பதே இங்கு எதிர்­பார்க்கும் விட­ய­மாக   உள்­ளது. எவ்­வாறு  இந்த விட­யங்கள்  நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்­பது தொடர்­பாக  மக்கள் எதிர்­பார்ப்­புடன் இருக்­கின்­றனர். இவற்றில்  மிக  அவ­ச­ர­மாக திருத்­தப்­ப­ட­வேண்­டிய பல பிரச்­சி­னைகள் உள்­ளன. குறிப்­பாக பொரு­ளா­தார வளர்ச்சி வீதங்கள் அண்­மை­ய­ வ­ரு­டங்­க­ளாக  வீழ்ச்­சி­ய­டைந்த  நிலை­யி­லேயே உள்­ளன.  அவை தொடர்பில்   கவனம் செலுத்­தப்­ப­ட­ வேண்டும்.


 அத்­துடன்  தொழில் வாய்ப்­புக்­களை உரு­வாக்­குதல், மற்றும் மக்­களின் மனி­த­வ­ளத்தை மேம்­ப­டுத்துதல், திறன் அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுத்தல் போன்­றவை தொடர்­பா­கவும் கவனம் செலுத்­தப்­ப­ட­வேண்டும்.  

வடக்கு–கிழக்கு
அதே­போன்று  வடக்கு–கிழக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக     ஆரா­யும்­போது அங்கு நீண்­ட­கா­ல­மாக  தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னைகள் உள்­ளன.  2009ஆம் ஆண்டு   மூன்று தசாப்­த­கால யுத்தம்  நிறை­வுக்கு வந்­தது.   எனினும்  அந்த யுத்தம் ஏற்­பட்­ட­மைக்­கான கார­ணிகள் இது­வரை தீர்க்­கப்­ப­ட­வில்லை.  அதே­போன்ற   30 வரு­ட­கால யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பிரச்­சி­னை­களும் தீர்க்­கப்­ப­ட­வில்லை.   யுத்தம் முடி­வ­டைந்து  ஒரு தசாப்தம் நிறை­வ­டைந்­துள்ள சூழ­லிலும் குறித்­த ­பி­ரச்­சி­னைகள் யாவும் இன்னும் தீர்க்­கப்­ப­டாமை உள்­ள­மை­யா­னது  ஒரு  துர­திஷ்­ட­வ­ச­மான நிலை­மை­யாகும்.


வடக்கு–கிழக்கைப் பொறுத்­த­வ­ரையில்  பல   சிக்­கல்கள்,   இன்னும் தீர்க்­கப்­ப­டாமல்  நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன.  பொறுப்­புக்­கூறல் விவ­காரம், காணா­மல்­போனோர் பிரச்­சினை, அர­சியல் கைதிகள் விடயம்,   பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதி,   இழப்­பீடு விடயம்,   வாழ்­வா­தாரப் பிரச்­சினை,  யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களை அபி­வி­ருத்தி செய்தல், தேசிய ஒற்­று­மை­யையும் புரிந்­து­ணர்­வையும் பலப்­ப­டுத்­துதல்,  காணி­களை விடு­விக்கும் செயற்­பா­டு­களில் தாமதம், மற்றும் கல்வி சுகா­தாரம், போக்­கு­வ­ரத்து பல நெருக்­க­டிகள் வடக்கு–கிழக்கில்  நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. எனவே  இந்த பிரச்­சி­னை­களை அர­சாங்கம் விரை­வாக  தீர்த்­து ­வைப்­ப­தற்கு எவ்­வாறு நட­வ­டிக்கை எடுக்­கப்­போ­கின்­றது என்­பது    தமிழ்மக்­களின்  எதிர்­பார்ப்­பாக உள்­ளது.


மிக முக்­கி­ய­மாக வடக்கு–கிழக்கைப் பொறுத்­த­வ­ரையில் காணா­மல் ­போனோர் விவ­கா ரம், அர­சியல் கைதிகள் விடயம், இழப்­பீடு வழங்­குதல்,  மக்­களின் வாழ்­வா­தாரப் பிரச்­சினை என்­பன   மிக அவ­ச­ர­மாக அவ­தானம் செலுத்­தப்­ப­ட­வேண்­டிய  அம்­சங்­க­ளாக உள்­ளன.  


காணா­மல்­போனோர் விவ­காரம்
காணா­மல்­போ­னோரைப் பொறுத்­த­வ­ரையில் மக்கள் தொடர்ந்தும் போரா­டிக்­கொண்டே இருக்­கின்­றனர்.  தமது  அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதைக் கண்­டு­பி­டித்து வெளிப்­ப­டுத்த வேண்­டு­மென பாதிக்­கப்­பட்ட  மக்கள் கோரு­கின்­றனர்.  ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ   காணா­மல்­போ­னோரை மீண்டும் கொண்­டு­வர முடி­யாது என்றும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இழப்­பீடு வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும்  ஒரு கட்­டத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.


எப்­ப­டி­யி­ருப்­பினும்  காணா­மல்­போ­னோரின் உற­வுகள் அதா­வது பாதிக்­கப்­பட்ட  உற­வு­க­ளுக்கு எந்­த­வி­த­மான  இழப்­பீ­டு­களும் வழங்­கப்­ப­ட­வில்லை. காணா­மல்­போனோர் குறித்து ஆராய கடந்த அர­சாங்­கத்தின்   காணா­மல்­போனோர் அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­டது.   எனினும்  புதிய அர­சாங்­கத்தில் அந்த அலு­வ­லத்தில் எவ்­வாறு செயற்­ப­டப்­போ­கின்­றது என்­பது தொடர்­பாக தெளி­வற்ற தன்மை காணப்­ப­டு­கின்­றது. கடந்த அர­சாங்க காலத்தில்  இழப்­பீடு வழங்­கு­வது தொடர்­பா­கவும் ஒரு அலு­வ­லகம் நிய­மிக்­கப்­பட்­டது.  அந்த அலு­வ­லகம்   அடுத்த கட்­ட­மாக எவ்­வாறு செயற்­ப­டப்­போ­கின்­றது என்­பது  தெளி­வில்­லாமல் இருக்­கி­றது. காணா­மல்­போ­னோரின் இந்தப் பிரச்­சி­னைக்கு ஜனா­தி­பதி கோத்­த­பாய தலை­மை­யி­லான அர­சாங்கம்   ஏற்­றுக்­கொள்­ளக்­ கூ­டிய ஒரு தீர்வை வழங்­கு­வது அவசிய மாகிறது. அந்த பாதிக்­கப்­பட்ட மக்­க­ ளுக்கு  வாழ்­வா­தார உத­விகள்  செய்­யப்­ப­ட­வேண்டும் என்­ப­துடன் இழப்­பீ­டுகள்  வழங்­கப்­ப­டு­வதும் அவ­சி­ய­ம். முக்­கி­ய­மாக  பிள்­ளைகள்  காணா­மல்­போ­யுள்ள பெற்றோர், கணவன் காணா­மல் ­போ­யுள்ள நிலையில் மனைவி,  சகோ­த­ரர்கள் காணா­மல் ­போ­யுள்ள நிலையில் உற­வி­னர்கள் என பாதிக்­கப்­பட்ட மக்கள்   பல்­வேறு மட்­டங்­களில் இருக்­கின்­றனர். அவ்­வாறு பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது  அன்­றாட வாழ்க்­கையை கொண்டு செல்­வ­தற்கு கூட கஷ்­டப்­ப­டு­கின்ற நிலை­மையே நீடிக்­கின்­றது.  அது­மட்­டு­மன்றி அவர்­களின் சமூக பாது­காப்பு தொடர்­பா­கவும் பல்­வேறு பிரச்­சி­னைகள் உள்­ளன.
எனவே இந்த விடயம் தொடர்­பாக  அவ­ச­ர­மாக   கவனம் செலுத்­தப்­ப­ட­வேண்டும்.   ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உதவத் தயா­ராக இருப்­ப­தாக  பல சந்­தர்ப்­பங்­களில் கூறி­யி­ருக்­கிறார். எனவே    பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான உதவி    தொடர்பில் கவனம் செலுத்­தப்­ப­ட­வேண்டும்.

நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­புங்கள்  
 உற­வு­க­ளையும்  உடை­மை­க­ளையும் இழந்து இந்த மக்கள்   விரக்­தியில் இருக்­கின்­றனர்.   அவர்கள் மத்­தியில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும்.  யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் நம்­பிக்­கையை   கட்­டி­யெ­ழுப்­பு­வது மிக  பிர­தா­ன­ விட­ய­மாகும்.   நம்­பிக்கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதில் குறை­பாடு காணப்­படின்,   அங்கு விரி­சல்கள் ஏற்­படும் ஆபத்து இருக்­கி­றது. எனவே அதற்கு இட­ம­ளிக்­காமல் பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் நம்­பிக்­கைய   கட்­டி­யெ­ழுப்­பு­வ­துடன்  புதிய எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு விசேட வேலைத்­திட்­டங்கள் அவ­சி­ய­ம். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில்  வடக்கு–கிழக்கு தமிழ் மக்கள்  ஒட்­டு­மொத்­த­மாக ஒரு தீர்­மா­னத்தை எடுத்­தி­ருந்­தனர்.  அந்த தீர்­மா­ன­மா­னது தென்­னி­லங்கை மக்­களின்  தீர்­மா­னத்­தி­லி­ருந்து முற்­று­ மு­ழு­தாக மாறி­யி­ருந்­தது.

விஜே­தா­சவின் யோசனை  
எனவே   அதற்­கான காரணம் என்ன என்­பது தொடர்­பாக ஆரா­ய­வேண்டும். அதா­வது   அபி­வி­ருத்­திகள் இடம்­பெற்­ற­போ­திலும் இந்த மக்­களின் மனதை வெல்­­வ­தற்கு தென்­னி­லங்கை அதி­கா­ரத்­த­ரப்­பி­னரால் முடி­ய­வில்லை என்­பது தெளி­வா­கின்­றது. எனவே  அந்த நிலைமை ஏன் ஏற்­பட்­டது என்­பதை ஆரா­ய­வேண்டும். இது தொடர்பில் அண்­மையில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த  ஆளும் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ தமிழ்ப் பேசும் மக்­களின் மனங்­களை வெற்­றி­கொள்ள  விசேட வேலைத்­திட்டம் ஒன்றை முன்­னெ­டுக்­க­ வேண்டும் என்றும்  அதற்கு  ஒரு தனி அமைச்சு உரு­வாக்­க­வேண்­டி­யது அவ­சியம் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார். ஆனால் அந்த   வேலைத்­திட்­டத்தில் தமிழ்க் கூட்­ட­மைப்பின்  பிர­தி­நி­தி­களை இணைத்­துக்­கொள்­ளக்­கூ­டாது என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.   எனினும்   தமிழ்மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள, மக்கள்  பிர­தி­நி­தி­களை தொடர்­பு­ப­டுத்­தாமல்  எவ்­வாறு   அர­சாங்கம் விசேட வேலைத்­திட்­டத்தை   முன்­னெ­டுக்கும் என்­பது தெரி­ய­வில்லை. எனினும் அந்த மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் விசே­ட­மாக ஆராய்ந்து விரை­வாக தீர்வைப் பெற்­றுக் ­கொ­டுத்து   மக்கள் மத்­தியில் ஒரு  புதிய நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வது அவ­ச­ர­மாக செய்­ய­வேண்­டிய ஒரு காரி­ய­ம். யுத்தம் முடிந்து   பத்­து­வ­ரு­ட­கா­ல­மாக இந்தக் காரியம் செய்­யப்­ப­டாமல் இருக்­கின்­ற­மை­யா­னது ஒரு துர­திஷ்­ட­வ­ச­மான நிலை  என்­பதே யதார்த்­த­ம்.


எனவே  ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ இந்த விட­யத்தில் என்ன செய்­யப்­போ­கிறார் என்­பதை அனை­வரும் எதிர்­பார்த்து காத்­தி­ருக்­கின்­றனர்.  அவர்  ஒரு பல­மான தலைவர் என  பார்க்­கப்­ப­டு­கின்றார். எனவே இந்த விட­யங்­களில்  அவ­ரின் அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் எப்­ப­டி­யி­ருக்கும் என்­பது  மக்­களின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.


மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள்
மலை­யக மக்­களின்   சம்­பள பிரச்­சினை உள்­ளிட்ட அடிப்­படை பிரச்­சி­னை­களும் உட­னடி கவ­னத்­திற்­குட்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.   மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்­களுக்கு  1000 ரூபா சம்­ப­ளத்தைப் பெற்­றுக் ­கொ­டுப் ­ப­தாக ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ வாக்­கு­றுதி அளித்­தி­ருக்­கின்றார். அந்த விடயம் விரை­வாக  நிறை­வேற்­றப்­ப­டு­வது இன்­றி­ய­மை­யா­தது. அது­மட்­டு­மன்றி அவர்­களின் வீட்­டுப்­பி­ரச்­சினை, சுகா­தாரம், கல்வி போக்­கு­வ­ரத்து மற்றும் சமூக அபி­வி­ருத்தி என்­ப­னவும்  உட­னடி அவ­தா­னத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்டு தேவை­யான மறு­சீ­ர­மைப்பு  இடம்­பெ­ற­வேண்­டி­யது அவ­சி­ய­ம்.  புதிய ஜனா­தி­பதி இந்த விட­யத்தில்   தான் முன்­வைத்­துள்ள  விஞ்­ஞா­ப­னத்­திற்கு அமைய எவ்­வாறு  அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை எடுப்பார் என மக்கள் எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றனர்.  கடந்த சில வரு­டங்­க­ளாக மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000ரூபா சம்­பளம் என்­பது ஒரு கன­வா­கவே இருந்து வரு­கின்­றது. எனவே விரைவில்   அதற்கான  ஏற்பாடுகளை முன்னெடுத்து மலையகத்  தோட்டத் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை ஜனாதிபதி  வழங்குவார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முஸ்லிம் மக்கள்
அத்துடன் முஸ்லிம் மக்களின் பிரச்சினை கள் தொடர்பாகவும்   உடனடியாக அவதா னம் செலுத்தப்படவேண்டும்.  அந்த மக்களின் அரசியல்  சமூக கலாசார பொருளாதார   நெருக்கடிகள் தொடர்பில்  ஆராயவேண்டும். ஆளும் கட்சியில் இருக்கின்ற முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும்  முக்கியஸ்தர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.  அவர்கள் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்து,  பிரச்சினைகள் இருக்கும் இடத்தில் அவற்றைத் தீர்ப்பதற்கான   யோசனைகளை முன்வைப்பது அவசியமாகின்றது.  

ஜனாதிபதி கூறும் சமத்துவ அபிவிருத்தி
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அடிக்கடி சமத்துவம் குறித்து பேசிவருகின்றார்.  அனைத்து மக்களுக்கும் சமத்துவமான   அபிவிருத்தியும்  வளப்பகிர்வும்   முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி கூறிவருகிறார்.  எனவே அந்த நாட்டில் வாழும் எந்தவொரு சமூகத்திற்கும்   அநீதிகள் ஏற்படாதவகையில் சமத்துவமான   நிர்வாகத்தை  ஜனாதிபதி முன்னெடுப்பார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  புரையோடிப்போயுள்ள  பிரச்சினைகளைத் தீர்த்து   புதியதொரு நாட்டைக் கட்டி யெழுப்ப  ஆளும் தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.  மலர்ந்துள்ள  புதிய வருடத்தில்   மற்றும் புதிய தசாப்தத்தில்   பல்லின மக்களுக்கிடையில்   ஒற்றுமையை முன்னெடுத்து  பன்முகத்தன்மையில் வெற்றிகாண  ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கம்   செயற்படுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  அந்த எதிர்பார்ப்பை செயற்பாட்டு ரீதியில்   எவ்வாறு  நடைமுறைப் படுத்தப்போகின்றனர் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.  

  • ரொபட் அன்டனி
பகிரவும்...