Main Menu

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்பா? ஆதரவா? – நாளை முடிவு என்கின்றது கூட்டமைப்பு

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக கூட்டமைப்பு இதுவரை எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என அறிய முடிகின்றது.

இந்நிலையில் நாளை இடம்பெறும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து முடிவு செய்யப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இதேவேளை எரிபொருள் விலையேற்றம் தொடர்பான அரசாங்கத்தின் முடிவை கடுமையாக
எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...