நண்பனின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞன் உயிரிழப்பு – நண்பன் தற்கொலை!

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் தலைநகர் அட்லாண்டாவின் புறநகர் பகுதியொன்றில் நண்பர் ஒருவரின் குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்தத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லாரன்சஸ்வில்லேவை சேர்ந்த டெவின் ஹோட்ஜ் (வயது 15) என்பவரை பார்க்க நண்பர்கள் 3 பேர் நேற்று முன்தினம் அவருடைய வீட்டுக்கு வந்தனர். அப்போது டெவின் ஹோட்ஜ், தங்கள் வீட்டில் இருந்த கைத் துப்பாக்கியை எடுத்து வந்து நண்பர்களிடம் காட்டியுள்ளார்.

இதன்போது எதிர்பாராத விதமாக டெவின் ஹோட்ஜ் துப்பாக்கியை அழுத்திவிட்டான். இதில் அருகில் இருந்த சாத் கார்லெஸ் (17) என்ற இளைஞரின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

இதையடுத்து அருகில் இருந்த மற்ற 2 நண்பர்களும், அங்கிருந்து எழுந்து ஓடிச் சென்று பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பொலிஸார் வருவதற்குள் சாத் கார்லெஸ் உயிழந்துவிட்டார்.

அதேநேரம், பொலிஸார் வருவதை கண்டு டெவின் ஹோட்ஜ் அருகில் உள்ள வீட்டுக்குள் சென்று மறைந்திருந்தா்ர. எனினும், பொலிஸார் தன்னை எப்படியும் கைது செய்து விடுவார்கள் என அஞ்சிய டெவின் ஹோட்ஜ், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !