நடிகை ரம்பாவுக்கு கனடாவில் வளைகாப்பு!

பிரபல நடிகை ரம்பாவுக்கும், யாழ்பாணத்தை பூர்விகமாக கொண்ட கனேடிய தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே லாவண்யா, சம்பா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ரம்பா தனது கணவருடன் கருத்து வேறுபாட்டுடன் உள்ளதாவும் விரைவில் இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்படவுள்ளதாகவும் வதந்திகள் பரவியது.

இந்த நிலையில் வதந்திகளை பொய்யாக்கும் வகையில் ரம்பாவின் மூன்றாவது வளைகாப்பு நிகழ்ச்சி கனடாவில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த வளைகாப்பு விழாவில் நடன இயக்குனர் கலா உள்பட பலர் கலந்து கொண்டனர். ரம்பாவின் வளைகாப்பு வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !