நடிகை காஜல் அகர்வால் திருமண பந்தத்தில் இணைந்தார்
மும்பையில் நடைபெற்ற நடிகை காஜல் அகர்வாலின் திருமண ஒளிப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
நேற்று (வெள்ளிக்கிழமை) தொழிலதிபர் கெளதம் கிச்லுவும் நடிகை காஜல் அகர்வாலும் திருமணப் பந்தத்தில் இணைந்துள்ளனர்.
மும்பையிலுள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் ஒளிப்படங்களும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக காஜல் அகர்வால் திகழ்கின்றார். தமிழில் கடைசியாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.