நடிகர் சங்க தேர்தலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த வருடம், ஜூன் 23ஆம் திகதி தேர்தல் இடம்பெற்றது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை இரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் புதிதாக தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாசை நியமித்த நீதிபதி, மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஷால் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், அப்துல் குத்தூஸ் அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.
மேலும், இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக ஏப்ரல் 8ஆம் திகதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...