Main Menu

நடிகரும் , வில் வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி காலமானார்

1986-ம் ஆண்டு வெளியான ‘புன்னகை மன்னன்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி.
மதுரையை சேர்ந்த இவர் கராத்தே மாஸ்டர் ஆவார்.
சினிமாவுக்கு அப்பாற் வில் வித்தை பயிற்சியாளராகவும் ஹுசைனி திகழ்ந்துள்ளார்.
ஷிஹான் ஹுசைனி தனக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக சென்னையில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கராத்தே, வில்வித்தை வீரரும், நடிகருமான ஹூசைனி நேற்று நள்ளிரவு (24) உயிரிழந்தார்.
தான் உயிரிழந்த மூன்று நாட்களுக்கு பிறகு, தனது உடலை ஸ்ரீ ராசந்திரா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தானம் செய்ய விரும்புவதாக ஹூசைனி வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருந்தார்.
பகிரவும்...
0Shares