நடப்பு ஆண்டு பர்முயுலா-1 கார்பந்தயத்தில் பதியப்பட்ட சாதனைகளின் தொகுப்பு

பல கோடி இரசிகர்களின் விருப்ப விளையாட்டான பர்முயுலா-1 கார்பந்தயம், நடப்பு ஆண்டில் பல்வேறு சாதனைகளுடன் முடிவுக்கு வந்துள்ளது.

நடப்பு ஆண்டுக்கான பர்முயுலா-1 கார்பந்தயத்தில், மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹெமில்டன் 11 வெற்றிகளுடன் சம்பியன் பட்டத்தை வென்றார்.

இதன் மூலம் தனது ஐந்தாவது உலக சம்பியன் கிண்ணத்தை தன் கைகளில் ஏந்திய ஹெமில்டன், ஐந்து சம்பியன் பட்டங்களை வென்றவர்கள் வரிசையில் வான் மேனுவல் ஃபேன்கியோவுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்துக் கொண்டார்.

இந்த நிலையில் இவ்வாறான சாதனைகளையும் தாண்டி, நடப்பு ஆண்டில், பர்முயுலா-1 கார்பந்தய வரலாற்றிலேயே நிகழாத பல சாதனைகள், திருப்பங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த சுவாரஸ்யம் தரும் விடயங்களை தற்போது பார்க்கலாம்…

பர்முயுலா-1 கார்பந்தய வரலாற்றிலேயே முதல் முறையாக நடப்பு தொடரில் தான், பிரான்ஸ், ஆஸ்திரியா, இங்கிலாந்து எனத் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் இடைவெளியே இல்லாமல் பந்தயங்கள் நடைபெற்றுள்ளன.

அத்தோடு, இதுவரை ஃபெராரி தயாரித்த காரே அதிகத் திறன் கொண்ட காராக உள்ளது. அந்த காரையே இம்முறை முந்தி, பென்ஸ் அணியின் ஹெமில்டன் சம்பியன் பட்டம் வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இதுதவிர ஒரே தொடரில் அதிகம் போடியம் ஏறிய வீரர்களில் ஹெமில்டன் முதலிடம் பெற்றார். நடைபெற்ற 26 போட்டிகளில் 24 போட்டிகளில் அவர் போடியம் ஏறியுள்ளார்.

மேலும், பென்ஸ் அணியின் மற்றொரு வீரரான வேல்டரி பொட்டாஸ் நடப்பு தொடரில், ஒருபோட்டியில் கூட முதலிடம் பிடிக்கவில்லை என்பது சற்று வருத்தமான பதிவாக இம்முறை பதியப்பட்டது.

பர்முயுலா-1 கார்களில் மீண்டும் ஹாலோ பாதுகாப்புக் கருவியைக் கொண்டுவந்ததால் பெல்ஜியம் பந்தயத்தில், சார்லஸ் லெக்லார்க்கின் தலை தப்பியது.

பிட் ஸ்டாப்பில் (pவை ளவழி) தொழில்நுட்பக் கோளாறால் கிமி ரொய்க்கோனன், பிட் மெக்கானிக் மீது காரை ஏற்றிய சம்பவம் நடப்பு தொடரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுபுறம் தேவையில்லாமல் மேக்ஸ் வெஸ்டப்பன் காரில் மோதி அவர் முதலிடம் பிடிக்கவேண்டிய பந்தயத்தில் அவரைப் பின்னுக்குத் தள்ளியதால் எஸ்டபன் ஆக்கோனுடன், மேக்ஸ் பிட்ஸ்டாப்பில் மல்லுக்கட்டி நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

நடப்பு தொடரோடு மெக்லரன் அணியின் வீரரான ஃபெர்னாண்டோ அலோன்ஸோ, பர்முயுலா-1 கார்பந்தய தொடருக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதிகமுறை பந்தயத்தை முடித்த வீரர் என்ற பெருமையுடன் பர்முயுலா-1 கார்பந்தய தொடரிலிருந்து அலோன்ஸோ, விடைபெற்றார். அவர் 312 பந்தயங்களில் 245 பந்தயங்களை முடித்துள்ளார்.

இரண்டு போல் நிலைகளையும், 4 அதிவேக லேப் சாதனைகளை கொடுத்திருந்தாலும், டேனியல் ரிக்கார்டோவுக்கு இதுதான் மிக மோசமான தொடர். ஒரு ரெட்புல் பந்தய வீரர் தொடர்ந்து 15 பந்தயங்களில் போடியம் ஏறாமல் இருப்பது இதுவே முதல் முறை.

மேலும் 1969ஆம் ஆண்டுக்கு பிறகு பிரேஸில் பந்தய வீரர் ஒருவர் இல்லாமல் நடைபெற்ற முதல் பர்முயுலா-1 பந்தய தொடராக இது அமைந்திருந்தது.

நடப்பு தொடரில் தான் முதல் முறையாக ஐந்து தடவைகள் பாதுகாப்பு கார்கள் பயன்படுத்தப்பட்டன.

ஒரு தொடரில் ஹெமில்டன் எடுத்த அதிகபட்ச புள்ளிகளாக இம்முறை சாதனை புள்ளிகளை அவர் பதிவு செய்தார். இங்கிலாந்தின் லீவிஸ் ஹெமில்டன் 408 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.

2013ஆம் ஆண்டுக்கு பிறகு, 113 பந்தயங்கள் கடந்து இந்த முறை கிமி ரெய்க்கோனன் முதலிடம் பிடித்தார்.

செபஸ்டியன் வெட்டல், 111ஆவது முறையாக போடியம் ஏறியுள்ளார். இதன் மூலம் அதிக முறை போடியம் ஏறிய வீரர்களில் மூன்றாம் இடம் பிடித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !