நகைச்சுவை துணுக்குகள்

கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.
மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?

ஏங்க அண்டா குண்டா பாத்திரங்களையெல்லாம் விக்கிறீங்க?

என்னோட பையன் பட்டணத்திலே சினிமாவில் சின்னச் சின்ன பாத்திரத்திலே நடிக்கிறானாம். செலவுக்குப் பணம் அனுப்பச் சொன்னான்.


டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????
படத்தின் முடிவில் தற்கொலை செய்து கொள்கிறார்…

யார்..வில்லனா? கதாநாயகனா?..

தயாரிப்பாளர்..


அப்பா: “ரேங் கார்ட் எங்கடா?”

மகன்: “இந்தாங்கப்பா ரேங் கார்ட்”

அப்பா: “அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா”

மகன்: “சரிடா மச்சான், கையெழுத்து போடு”


“பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க?”
“லோராண்டி ன்னு வச்சிருக்கோம்”
“என்னய்யா பேர் இது. கேள்விப்பட்டதே இல்லையே”
“என்ன இப்படி சொல்லிட்டீங்க. சித்தர் பாடல்கள்ளே இடம் பெற்ற பேர் சார் இது”
“அது என்ன பாடல்?”
“நந்தவனத்தி லோராண்டி”

மாணவன் சார், டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…

கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்!

மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..

கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்!


ஊசி போட
நர்ஸ் வேணும்,
காசு போட
பர்ஸ் வேனும்,
காபி போட
சுகர் வேணும்,
கடலை போட
ஃபிகர் வேணும்,

கொக்கரக்கோ கும்மாங்கோ!


உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.

“கோர்ட்டுல என்ன டமால்னு சத்தம்?”

“சாட்சி பல்ட்டி அடிச்சிட்டாராம்”


என்னதான் உங்க வீட்டு டிவி விடிய விடிய ஓடினாலும் அதால ஒரு இஞ்சு கூட நகரமுடியாது.

உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே ?
நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் .

செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.

“நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா…!”

“பெண் அவ்வளவு அழகா?” “இல்லடா… விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா…!”


பாய்: இன்னிக்கு நைட் நாம ஊர விட்டு ஓடிப் பொய் விடலாம்…
கேர்ள்: எனக்கு தனியா வர பயமா இருக்கு….
பாய்: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா…
கேர்ள்: ?!?….

டாக்டர்: “நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக்
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்”

நோயாளி: “டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்”


என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?”

“ரெண்டாவது ‘ஷாக்’ எதுக்குன்னு, தான்..!”


நண்பர் – 1: தொட்டதக்கெல்லாம் என் மனைவி கோவிச்சுகுரா…
நண்பர் – 2: அப்படி நீ என்னத்த தொட்ட?
நண்பர் – 1: அவளோட தங்கச்சியைத்தான்….
நண்பர் – 2: ?!?…………..

கேர்ள்: எக்ஸாம் டைம்’ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்…
பாய்: இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்.

கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால், ஒரு நாள் மிருகமா மாறப் போறேன். ஜாக்கிரதை.

மனைவி: நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்!


ஆசிரியர்: நமது நாட்டின் தேசிய விலங்கு எது?
மாணவன்: புலி உறுமுது…
ஆ: தேசிய மலர்?
மா: ஒரு சின்ன தாமரை…
ஆ: ஒரு சோழ மன்னனின் பெயர்?
மா: கரிகாலன் கால போல…
ஆசிரியர் அடிக்கிறார்…
மா: என் உச்சி மண்டைல சுர்ருங்குது….

1) YOU = Very Nice
YOU = Very Smart
YOU = Very Lovely
YOU = Very Lucky
YOU = Very Beauty
ஐ…. சிரிப்பைப் பாரு…. இது எனக்கு வந்த SMS….

ஆசிரியர்: நமது நாட்டின் தேசிய விலங்கு எது?
மாணவன்: புலி உறுமுது…
ஆ: தேசிய மலர்?
மா: ஒரு சின்ன தாமரை…
ஆ: ஒரு சோழ மன்னனின் பெயர்?
மா: கரிகாலன் கால போல…
ஆசிரியர் அடிக்கிறார்…
மா: என் உச்சி மண்டைல சுர்ருங்குது….

“அந்தத் திருடனைப் பிடிக்க முடியாதுன்னு எப்படிச் சொல்றீங்க?”

“அவனோட செல் நெம்பர்ல ட்ரை பண்ணினேன்.not reachableனு வந்தது சார்…!”


பிச்சைக்காரர்: “அம்மா தாயே… பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை.”

வீட்டுக்காரம்மா: ” பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா…
எனக்கு காது கேட்காது.”


அவன் நம்ம வீட்டு வேலைக்காரன் அவனுக்கு மரியாதை தராதே காமாட்சி..

சரிடா…


எல்லா பிகர்’யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி..

ஆனா எல்லா பாய்ஸ்’ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்’ஸ் மென்டாலிட்டி..

So, Boys are Genius…. Girls are Selfish….


வாஸ்கொடாகாமா இப்போது உயிருடன் இருந்தா அவர் பெயர் என்னத் தெரியுமா?

இஸ்கொடாகாமா… ஏன்னா “WAS ” இறந்த காலம்… “IS ” நிகழ் காலம்….
எங்களுக்கும் இங்கிலீஷ் லிடேரச்சர் தெரியும்ல…. எப்பூடி……


கேர்ள்: எக்ஸாம் டைம்’ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்…
பாய்: இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்…

ஹார்ட் அட்டாக்’னா என்ன?

பஸ் ஸ்டாப்’ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்… உனக்கு படபடப்பா இருக்கும்.. அது உன்ன பார்த்து சிரிக்கும்.. உனக்கு கை கால் லேசா நடுங்கும்… அது உன் பக்கத்துல வரும்… உனக்கு வியர்த்து கொட்டும்… அவ தன்னோட அழகான லிப்ஸ்’ஐ ஓபன் பண்ணி ”இந்த லவ் லெட்டர்’ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட கொடுத்துடுங்க”ன்னு சொல்லும்போது உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாரு…

அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்…….


ஒரு கல்லூரி வாட்ச்மேனிடம், பெற்றோர்கள்: “இந்த காலேஜ் எப்படி? நல்ல காலேஜ் தானே? ”

வாட்ச்மேன்: “அப்படித்தான் நினைக்கிறேன். இங்குதான் நான் இன்ஜினியரிங் டிகிரி முடித்தேன்.. உடனடியாக எனக்கு வேலை கிடைத்துவிட்டது”

பெற்றோர்கள்: ?!?…..


“தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?”

“மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா… பூக்காரி மேல!”


என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலை காட்ட முடியலை..”

“அப்படி என்ன பண்ணிட்டான்..?”

“என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டான்.”


டாக்டரும் , பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன் ?
ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம் !.

“இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து
வேலை செஞ்சேன்”

“அவ்வளவு பிசி ஒர்க்கா?”

“இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும்
எழுப்பிவிடலை”


ஃபுட் வோர்ல்டில்,
நபர் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன். என்கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா?
பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
நபர் : நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.

நான் நல்லவன்னு சொல்லி ஊரை ஏமாத்த நான் ஒன்னும் கெட்டவன் இல்ல…

நான் கெட்டவன்னு உண்மையை ஒத்துக்க நான் ஒன்னும் நல்லவன் இல்ல…

———- நான் அவன் இல்லை….


“அம்மா.. அப்பா ஏன் ஞாயிற்றுக்கிழமையில ஆஃபீஸ் ஃபைல வீட்டுக்கு கொண்டு வரார்?”

“ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்தால் தான் உங்கப்பாவிற்கு தூக்கம் வருமாம்.. அதுதான்..”


முடியாது முடியாது..
சில விஷயத்தை மாத்த முடியாது
காலிஃப்ளவர் தலைக்கு
வைக்க முடியாது.
கவரிங் கோல்டு அடகு
வைக்க முடியாது.
கோல மாவில்
தோசை சுட முடியாது.
வீணாப் போன குறுஞ்செய்தி
வந்தாலும்
உன்னால படிக்காம இருக்க முடியாது
* * * * *

காதலன்: ஒரே ஒரு முத்தம் கொடு….

காதலி: கல்யாணத்துக்கு அப்புறம்தான் நீங்க என்னத் தொட முடியும்…

காதலன்: சரி… கல்யாணம் முடிந்ததும் மறக்காம எனக்கு சொல்லி அனுப்பு….

காதலி: ?!?……..


ஏன்….
தண்ணி தெளிச்சி
கோலம் போடுறாங்க தெரியுமா…!
*
*
*
*
*
*
*
*
கோலம் போட்டு
தண்ணி தெளிச்சா
கோலம் அழிஞ்சிடும்ல..!

துடிப்பது என் இதயம்தான்.
ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ
. வலித்தால் சொல்லிவிடு.
நிறுத்தி விடுகிறேன். துடிப்பதை அல்ல.
இப்படி
ஓவரா ரீல் விடுவதை.

நான் உங்களுக்கு 5 ஃபிகர்களோட ஃபோன் நெம்பர் தர்றேன்,வெரி ஸ்வீட் கேர்ள்ஸ். ஜாலியா கடலை போடலாம்.எவ்வளவு நேரம் வேணாலும் அவங்களோட பேசலாம்..
ஏர்டெல் -121
ஏர்செல் – 55333
ரிலையன்ஸ் – 369
பி எஸ் என் எல் -123
வோடஃபோன் -111
இந்த மேட்டர் யாருக்கும் தெரிஞ்சிட வேணாம்,நமக்குள்ளயே இருக்கட்டும்.

டாக்டர்: “நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக்
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்”

நோயாளி: “டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்”


ஒருத்தி: “இந்த ஊர்ல போலி டாக்டர் இருக்காரா?”

மற்றவள்: “ஏன் கேட்குறே?”

முதலாமவள்: “என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை,
அவங்களுக்கு காட்டத்தான்”


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !