சொற்பமான அளவு போராளிகள் கலந்துகொண்ட மஞ்சள் மேலங்கி போராட்டம்?

நேற்று திங்கட்கிழமை டிசம்பர் 31 ஆம் திகதி சோம்ப்ஸ்-எலிசேயில் மஞ்சள் மேலங்கி போராளிகள் 40,000 வரையில் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் உண்மையில் நடந்தது வேறு.
மஞ்சள் மேலங்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் 9,200 பேர் வரை நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக அறிவித்திருந்தனர். ஆனால் 200 பேர் மாத்திரமே கலந்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போது 40,000 பேர் வரை கலந்துகொள்ள இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாக்கோலம் பூண்டிருந்த சோம்ப்ஸ் எலிசேயில் மஞ்சள் மேலங்கி போராளிகள் குழுமி இருந்து, தேசிய கீதமான  La Marseillaise பாடசாலை வரிகள் மாற்றி பாடியிருந்தார்கள். தவிர, கடந்த சனிக்கிழமை <<Macron démission>> (மக்ரோன் பதவிவிலகவேண்டும்) என கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய புதுவருட வாழ்த்துச் செய்தியில் மக்ரோன் மஞ்சள் மேலங்கி போராட்டம் மெல்ல மெல்ல முடிவுக்கு வருவதாகவும் இயல்புக்கு திரும்புவதாகவும் தெரிவித்து, தனது கண்டனத்தையும் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், மிக சொற்பமான அளவு போராளிகள் கலந்துகொண்ட மஞ்சள் மேலங்கி போராட்டம், மக்ரோன் சொல்லியிருந்ததை உறுதிப்படுத்தியிருந்தது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !