தோற்றிருந்தால் புதைகுழியில் இருந்திருப்பேன் என்ற மைத்திரி, மஹிந்தவுடன் சிரித்தபடி கைகோர்த்துள்ளார்!

தான் தோற்றிருந்தால் புதைகுழியில் இருந்திருப்பேன் என்ற ஜனாதிபதி மஹிந்தவுடன் சிரித்த முகத்துடன் கைகோர்த்துள்ளார் என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இலங்கையில் மாற்றத்தை எதிர்பார்த்து நல்லாட்சியை ஏற்படுத்த வாக்களித்த மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏமாற்றிவிட்டாரென

நாட்டின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ள நிலையில், அதன் பின்னர் நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ”எனது தந்தையை கொலைசெய்தவர்களுடன் இன்று ஆட்சியாளர்கள் கைகோர்த்துவிட்டனர் என்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் ‘தான் தோற்றிருந்தால் இன்று புதைகுழியில் இருந்திருப்பேன்’ என அன்று குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று மஹிந்தவுடன் சிரித்த முகத்துடன் கைகோர்த்துக்கொண்டுள்ளார் என்றும் ஜனாதிபதியின் உண்மையான முகம் இன்றுதான் வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். அத்துடன் இந்த விடயம் நாட்டிற்கு சிறந்த விடயமல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !