தொலைந்து போன நாயினை தேடி 800 கிலோ மீட்டர்கள் பயணித்த குடும்பம்!

தொலைந்து போன நாய் ஒன்றினை தேடி, குடும்பம் ஒன்று 800 கிலோ மீட்டர்கள் பயணித்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரான்சின் Castres (Tarn) பகுதியில் வசித்து வரும் குடும்பம் ஒன்றின் செல்லப்பிராணியான நாய் ஆறு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளது.

இதனால் குறித்த குடும்பத்தினர் மனதளவில் சோர்வடைந்துள்ளனர். பத்திரிகைகளில் விளம்பரம் செய்தும், குறித்த நாயினை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்கள் ஆன நிலையில், செயலி ஒன்றின் மூலம் நாய் இருக்குமிடம் தெரியவந்துள்ளது.

குறித்த செயலியில் நாயின் புகைப்படம் பதிவேற்றப்பட்டு தகவல்களும் பகிரப்பட்டிருந்த நிலையில், நாய் 400 கிலோமீட்டர்க்ள் தொலைவில் உள்ள kennel Saintes (Charentes-Maritimes) நகரில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தகவல் கிடைத்த மறுநாள் எவ்வித தயக்கமுமின்றி குடும்பத்தலைவர் அவரின் மகள் மற்றும் உறவினர் ஒருவருடன் நாயை மீட்க பயணித்துள்ளனர்.

400 கிலோமீட்டர்கள் தூரம் பயணித்து, பின்னர் நாயுடன் அதே அளவு தூரம் மீண்டும் பயணித்து வீடு திரும்பியுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !