தொடர் விபத்துக்களின் தாக்கம்: ஆய்வுக்குள்ளாகின்றன இந்தோனேஷிய போயிங் ரக விமானங்கள்

இந்தோனேஷியாவிற்கு சொந்தமான சகல போயிங் ரக விமானங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய இந்தோனேஷியா தீர்மானித்துள்ளது.

எத்தியோப்பியாவில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை)  போயிங் ரக விமானம்  விபத்துக்குள்ளான நிலையில் இந்த விடத்தை இந்தோனேஷியா இன்று அறிவித்துள்ளது.

கடந்த வருடம் இந்தோனேஷியாவுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கி இருந்தது. இதில் பயணித்த 189 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் எத்தியோப்பியாவில் இதே ரக விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கியுள்ளது. இந்த தொடர் விபத்துக்கள் போயிங் விமானம் தொடர்பாக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் இந்தோனேஷியா தமது ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்தோனேஷியாவில் கடந்த வருடம் விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் மீண்டும் தேடப்பட்டு வருகின்றது. இதேவேளை தற்போது சேவையில் இருக்கும் போயிங் ரக விமானங்கள் வானில் பறக்கும் தகுதிகளை கொண்டிருக்கிறதா என ஆய்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளது என இந்தோனேஷியா உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை போயிங் 737 மக்ஸ்-8’ ரக விமான சேவைகளை எத்தியோப்பியா, சீனா மற்றும்  சிங்கப்பூர் ஆகிய நாடுகள் சேவையிலிருந்து  இடை நிறுத்தியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !