தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம்; மைத்ரிபால சிறிசேனே சர்வதேச நாடுகளின் உதவியை நாடுவார்-Reuters செய்தி நிறுவனம்
இலங்கையின் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் தொடர்புகள் குறித்து அறிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா சர்வதேச நாடுகளின் உதவியை நாடுவார் என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் உள்ளூர் தீவிரவாத இயக்கங்களுடன் சர்வதேச இயக்கங்களின் தொடர்பும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால், சர்வதேச தீவிரவாதப் பின்னணி குறித்து அறிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா சர்வதேச நாடுகளின் உதவியை நாடலாம் என ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இன்று இரவு முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது. தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 24 பேர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது, மீண்டும் கொழும்பு நகரில் உள்ள ஒரு தெருவில் குண்டுவெடித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட குண்டு செயலிக்கப்படும் போது வெடித்ததாகக் கூறப்படுகிறது. எனினும் முழுமையான தகவல்கள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.