Main Menu

தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப்பின் பிடிவாதம் பொறுப்பற்ற செயல் – பிடன் கண்டனம்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ளாத டொனால்ட் ட்ரம்ப்பின் பிடிவாதம் பொறுப்பற்ற செயல் என தேர்தலில் வெற்றிப் பெற்ற ஜோ பிடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பிடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் ட்ரம்ப்பின் அரசு நிர்வாகம் ஜோ பிடன் வெற்றிக்கு இன்னும் அங்கீகாரம் அளிக்க மறுத்து வருகிறது.

மேலும் பல்வேறு மாநிலங்களில் ஜோ பிடன் வெற்றிக்கு எதிராக ட்ரம்ப் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அத்தோடு, பிடன் தரப்புக்கு அரசு நிர்வாகப் பொறுப்பை ஏற்க விடாமல் பல்வேறு தடைகளையும் ட்ரம்ப் விதித்துள்ளார்.

இந்த நிலையில் மாநில ஆளுநர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜோ பிடன், ட்ரம்ப்பின் நிர்வாகத்திற்க கண்டனம் வெளியிட்டுள்ளார்.