தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மஹிந்த இணக்கம்: மனோ அறிவிப்பு

இலங்கையில், மாகாண சபை தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

தன்னுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே முன்னாள் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மனோ கணேசன் இதனை கூறினார்.

இதன்போது மஹிந்த ராஜபக்ஷவுடன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சந்திப்பு குறித்து அமைச்சர் மனோ கணேசன் தெளிவுபடுத்தினார்.

மேலும், நாடாளுமன்றத்தில் மாகாண சபை சட்டத்தை திருத்த வேண்டுமாயின் அதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு தங்கள் 70 உறுப்பினர்களையும் கூட வாக்களிக்க வைத்து ஒத்துழைப்பு வழங்குவோம் எனக் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !