தேர்தல் கூட்டணி குறித்து கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலில் மக்களுடன் தான் கூட்டணி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் வருகிற சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களுடன்தான் கூட்டணி என்று கூறினார். கூட்டணி என்பது என் வேலை, வெற்றிக்கு எல்லோரும் உழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அடுத்த வருடம் இடம்பெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுடன் கமல்ஹாசன் கூட்டணி வைக்கக்கூடும் என தகவல்கள் வெளியான நிலையில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.