தேர்தல் ஆணைக் குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம்

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நேற்று (16) எழுத்து மூலம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

அதேநேரம் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்காக பாராளுமன்றத்தில் விரைவான தீர்வுக்கு வருமாறு தேர்தல் ஆணைக்குழுவால் அந்த கடிதம் மூலம் ​கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தேர்தல் ஆணைக்குழுவில் நடந்த அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !