Main Menu

தேர்தலை முன்னிட்டு விசேட பேருந்து, தொடருந்து சேவை

தேர்தலின் பின்னர் நடைபயணப் பேரணி மற்றும் வாகன பேரணிகளை முன்னெடுப்பதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, நீதியானதும் அமைதியானதுமான தேர்தலொன்றை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பொதுத் தேர்தல் முன்னிட்டு இன்று நண்பகல் 12 மணி முதல் விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தேர்தலை முன்னிட்டு பயணிகள் வசதி கருதி விசேட தொடருந்து சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பகிரவும்...
0Shares