தேர்தலில் தனித்தே களமிறங்குவோம்- கமல்ஹாசன்

மக்கள் பலம் இருப்பதால் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்தே களமிறங்கும் என்று அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஓராண்டில் கட்சியின் பலம் வேகமாக அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் கொடியேற்றி மக்களிடத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழகமெங்கும் மக்கள் நீதி மய்யம் என்ற குடும்பம் பரவியுள்ளது. நியாயமான பிரசங்கங்களின் கணக்கு வழக்குகளுடன் மேலும் வலிமை பெறும். நாங்கள் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. குறுகிய நாட்களே உள்ளன” எனக் கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !